Connect with us

Raj News Tamil

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ இந்த பிரபல நடிகரா? அசத்தல் அப்டேட்!

சினிமா

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ இந்த பிரபல நடிகரா? அசத்தல் அப்டேட்!

தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் பின்னணி பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இப்படத்தில், நடிகர் கவின் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

இந்த தகவல், 90 சதவீதம் உறுதியாகிவிட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. தளபதியின் மகன் இயக்கும் திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்.

அதனால், இது ஜோசன் சஞ்சய்-க்கும், கவினுக்கும் பக்கபலமாக இருக்கும் என்றும் திரை வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது.

More in சினிமா

To Top