Connect with us

Raj News Tamil

“வடிவேலு இல்லைனா.. சந்திரமுகியே கிடையாது..” – கீரவாணி

சினிமா

“வடிவேலு இல்லைனா.. சந்திரமுகியே கிடையாது..” – கீரவாணி

பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத் ஆகியோர் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கீரவாணி, ரசிகர்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சந்திரமுகி 2-ஆம் பாகத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு, வடிவேலுவின் காமெடி மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், அவருக்காகவே, இந்த திரைப்படத்தை காண்பதற்கு, பலரும் திரையரங்கிற்கு வருவார்கள் என்றும் கூறினார். கீரவாணி இவ்வாறு கூறியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top