Connect with us

Raj News Tamil

மத்திய பிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி

அரசியல்

மத்திய பிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி

ஐந்து மாநில தேர்தல்கள் அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்டமாக தெலுங்கனானவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிவடைந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி (எஸ்.பி), பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜக என இருமுனை போட்டியாகவே மத்தியப் பிரதேச தேர்தல் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 118 முதல் 130 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

டிவி9 வெளியிட்டுள்ள தகவலில் பாஜக 100-110, காங்கிரஸ் 90-100, மற்றவை 5-10 இடங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்கிபாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,காங்கிரஸ் 102 முதல் 125 தொகுதிகள் வரை வெல்லும் எனவும், பாஜக 100 முதல் 123 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் மற்றவை 0-5 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in அரசியல்

To Top