Connect with us

Raj News Tamil

4 படங்களில் நடிக்கும் நயன்தாரா!

சினிமா

4 படங்களில் நடிக்கும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா, கடந்த வருடம், காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ 2, கனெக்ட், கோல்டு, காட்ஃபாதர் ஆகிய 5 படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், இந்த வருடம் 4 படங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படத்திலும், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்திலும், நயன்தாரா நடித்து முடித்துள்ளார்.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்திலும், மோகன் ராஜா இயக்கத்திலும், தலா ஒரு படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார். இதில், மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இதன்மூலம், இந்த ஒரு வருடத்தில் ஜெயம் ரவியின் 2 படங்களில், நயன்தாரா நடிக்க உள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top