Connect with us

Raj News Tamil

மார்ச் 27ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

தமிழகம்

மார்ச் 27ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டட பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top