Connect with us

Raj News Tamil

ஜவான் மேடையில் லியோ.. அலறிய அரங்கம்..

சினிமா

ஜவான் மேடையில் லியோ.. அலறிய அரங்கம்..

ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான்.

இந்த திரைப்படம் வரும் 7-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை பிரியாமணி, ரசிகர்களிடம் உரையாற்றினார். அப்போது, ஜெயிலர், ஜவான், லியோ போன்ற பெரிய பெரிய படங்களில் தொடர்ந்து அனிருத் இசையமைத்து வருவதாக கூறினார்.

லியோ என்ற அவர் கூறியபோது, அங்கிருந்த விஜய் ரசிகர்கள், அரங்கம் அதிரும் அளவிற்கு, தங்களது கரகோஷத்தை எழுப்பினார்கள். இதுதொடர்பான வீடியோவும், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top