Connect with us

Raj News Tamil

ரஜினி170 படப்பிடிப்பு எப்போது? – படக்குழு அறிவிப்பு.

சினிமா

ரஜினி170 படப்பிடிப்பு எப்போது? – படக்குழு அறிவிப்பு.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170வது படம் உருவாக உள்ளது. அமிதாப் பச்சன், நானி, ஃபகத் ஃபாசில், சர்வானந்த், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது ரஜினி, தனது ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய நிலையில், இன்று நடைபெற்ற ரஜினி170 திரைப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டார். செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More in சினிமா

To Top