Connect with us

Raj News Tamil

மோதிக் கொள்ளும் உதயநிதி – சிவகார்த்திகேயன்! யாருக்கு வெற்றி?

சினிமா

மோதிக் கொள்ளும் உதயநிதி – சிவகார்த்திகேயன்! யாருக்கு வெற்றி?

மண்டேலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். இவர் அடுத்ததாக மாவீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதேபோன்று, பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களும், ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த இரண்டு படங்களும், ஜூன் 29-ஆம் தேதி அன்று, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களில் எது வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top