Connect with us

Raj News Tamil

தங்கலான் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு! அதிரடிக்கு தயார் ஆகும் விக்ரம்!

சினிமா

தங்கலான் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு! அதிரடிக்கு தயார் ஆகும் விக்ரம்!

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களின் வெற்றிக்கு பிறகு, தங்கலான் என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கே.ஜி.எப்பில் நடந்து முடிந்தது. இதையடுத்து, பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷனில், விக்ரம் பிசியாக இருந்து வந்தார்.

தற்போது அப்படம் வெளியாகிவிட்டதால், தங்கலான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாம். சென்னையில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில், சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், இன்னும் இரண்டு அல்லது 3 கட்ட படப்பிடிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top