சினிமா
கைவிட்ட அஜித்.. கைக் கொடுத்த 3 தமிழ் நடிகர்கள்!
அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால், அந்த படத்தில் இருந்து, தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, விக்னேஷ் சிவனின் கதி, அவ்வளவு தான் என்று சினிமா தரப்பினர் பேசி வந்தனர். இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளாராம்.
மேலும், இந்த படத்தில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இதுமட்டுமின்றி, இந்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், கமல்ஹாசன் தயாரிக்க உள்ளாராம். அஜித்தால் கைவிடப்பட்ட விக்னேஷ் சிவனுக்கு, 3 டாப் ஹீரோக்கள் உதவ முன்வந்துள்ளனர்.
You must be logged in to post a comment Login