Connect with us

Raj News Tamil

“இதுதான் உங்க கண்ணியமா” – த்ரிஷாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு!

சினிமா

“இதுதான் உங்க கண்ணியமா” – த்ரிஷாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு!

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து, ஆபாசமான முறையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இந்த பேட்டிக்கு, நடிகை த்ரிஷா உட்பட, பல்வேறு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு குரல்கள் 4 புறங்களில் இருந்தும் கிளம்பியதால், மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், நடிகை த்ரிஷா, அனிமல் படத்தை பார்த்துவிட்டு, பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், படம் சூப்பராக இருந்தது என்று கூறியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பெண்ணியத்திற்கு எதிராக உள்ள படத்தை பார்த்துவிட்டு, இப்படியொரு கமெண்ட் சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது பதிவை த்ரிஷா நீக்கியுள்ளார்.

More in சினிமா

To Top