Connect with us

Raj News Tamil

சூரியால் விடுதலை கதையை மாற்றிய வெற்றிமாறன்..! ஏன் தெரியுமா..?

சினிமா

சூரியால் விடுதலை கதையை மாற்றிய வெற்றிமாறன்..! ஏன் தெரியுமா..?

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. தியேட்டர்களை அதிரவைத்து வரும் இந்த படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடயே விடுதலை திரைப்படம் உருவானதை பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் விடுதலை படத்தின் கதையே வேறொன்றாக இருந்தது. எந்த கனவும் இல்லாத சாதாரண மனிதன் தினம்தோறும் எப்படி பயணிக்கிறான்.

ஒவ்வொரு நாளும் முடிந்த பின்பு அடுத்த நாளை எதிர்நோக்கி இருக்கும் எளிய மனிதனின் கதையாகவே இருந்தது என்றார். அதற்காகவே சூரியை தேர்ந்தெடுக்க காரணம் என்று கூறினார். ஆனால் சூரியிடம் கதையை கூறும்போது, அவரிடம் இருந்த போலிஸ் அதிகாரிக்கான தோரணையும், ஆர்வமும் கதையில் பல மாற்றங்களை கொண்டுவர உதவியது என்றார். இதனால் படமும் வேற லெவலில் வந்துள்ளது என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top