Connect with us

Raj News Tamil

“நாங்களும் அதுமாதிரி படம் எடுக்கல” – உண்மையை ஒப்புக்கொண்ட வெற்றிமாறன்

சினிமா

“நாங்களும் அதுமாதிரி படம் எடுக்கல” – உண்மையை ஒப்புக்கொண்ட வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.

இதில், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், “நல்லவர்களை கதாநாயகர்களாக காட்டி நீண்ட நாட்கள் ஆகிறது. நாங்களும் அதுமாதிரியான திரைப்படங்களை எடுக்கவில்லை. எனவே, இந்த மாதிரியான படத்தை எடுத்து வெற்றி பெற செய்ததற்கு நன்றி” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இளையராஜா பற்றி பேசிய வெற்றிமாறன், “இந்த படம் பெரும் வெற்றியை பெரும் என்று இளையராஜா தான் முதலில் பாராட்டினார். இந்த படத்திற்கு இசையமைக்க, இளையராஜாவுக்கு கொஞ்ச நாட்கள் தான் கொடுத்திருந்தேன். ஆனால், அதற்குள் சிறந்த இசையை உருவாக்கி கொடுத்துள்ளார். அவருக்கும் என் நன்றிகள்” என்று தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top