Connect with us

Raj News Tamil

சூர்யாவுக்காக ஒவ்வொரு மாதமும் 8 ஆயிரம் கி.மீ தூரம் திரியும் வெற்றிமாறன்!

சினிமா

சூர்யாவுக்காக ஒவ்வொரு மாதமும் 8 ஆயிரம் கி.மீ தூரம் திரியும் வெற்றிமாறன்!

சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில், பெரும் வெற்றியை பெற்றது.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில், வெற்றிமாறன் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். இவ்வளவு பிசியான ஷெட்யுல்களுக்கு இடையே, மாதம் இரண்டு முறை, அவர் லண்டன் செல்வதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, சூர்யா நடிப்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டை முன்வைத்து எடுக்க இருப்பதால், அதற்கான கிராபிக்ஸ் பணிகள் அதிகம் உள்ளது.

இந்த பணிகளை மேற்பார்வை செய்வதற்காக தான், மாதம் இரண்டு முறை, இயக்குநர் வெற்றிமாறன் லண்டன் செல்கிறாராம்.

More in சினிமா

To Top