Connect with us

Raj News Tamil

விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி!

சினிமா

விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர், எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 31-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் வெளியான பிறகு, 2-ஆம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும், அந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்றும், தகவல் கசிந்துள்ளது. இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு, வாடிவாசல் படத்தையும், அதன்பிறகு வடசென்னை 2-ஆம் பாகத்தையும், வெற்றிமாறன் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top