Connect with us

Raj News Tamil

தி கோட் கடைசி படம் கிடையாது? இன்னும் 2 படங்கள் இருக்கு.. விஜய் அதிரடி பிளான்..

சினிமா

தி கோட் கடைசி படம் கிடையாது? இன்னும் 2 படங்கள் இருக்கு.. விஜய் அதிரடி பிளான்..

தமிழக அரசியலில் காலடி எடுத்து வைப்பதாக, நடிகர் விஜய் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பில், ஒப்பந்தம் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் இணைய இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இதனால், தளபதி விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தாலும், அரசியல் வருகையால் சந்தோஷமும் அடைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கைதி 2, விக்ரம் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில், சிறப்புத் தோற்றத்தில் விஜய் இடம்பெறுவார் என்று தகவல் கசிந்துள்ளது.

இதற்கான காட்சிகள், லியோ படத்தின் ஷீட்டிங்கின்போது லோகேஷ் கனகராஜ் சேர்த்து எடுத்துவிட்டாராம்.

More in சினிமா

To Top