Connect with us

Raj News Tamil

நாளை வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் பெருசா போகுதே…

சினிமா

நாளை வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் பெருசா போகுதே…

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகாமலே போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த அனுமானங்கள் அனைத்தையும் நொறுக்கி, திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

ஒவ்வொரு வாரமும், வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில், புதுப்புது திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரத்தையொட்டி, நாளை 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாம்.

அதாவது, ஹரிஷ் கல்யாண், இந்துஜா ஆகியோர் நடிப்பில், பார்க்கிங் திரைப்படமும், நயன்தாரா, ஜெய் ஆகியோர் நடிப்பில் அண்ணபூரணி திரைப்படமும், நாளை தான் வெளியாக உள்ளன.

மேலும், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தி திரைப்படம் அனிமல், நாளை தான் வெளியாக உள்ளது.

இதுமட்டுமின்றி, பாலாஜி முருகதாஸ் நடித்துள்ள வா வரலாம் வா, தர்ஷன் நடித்துள்ள நாடு ஆகிய படங்களும் நாளை தான் வெளியாகிறது. மேலும், சூரகன் என்ற திரைப்படமும், நாளை தான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த 6 திரைப்படங்களில், நல்ல விமர்சனங்களை பெறும் திரைப்படங்கள், அதிக திரைகள் பெறப்பட்டு, அதிக நாட்கள் திரையிடப்படும். மற்றப் படங்கள், சத்தமே இல்லாமல், திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், எந்த திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெறும் என்று பார்க்கலாம்.. இப்போது வரை, நயன்தாராவின் அண்ணபூரணி, ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் ஆகிய திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top