Connect with us

Raj News Tamil

ஜெயிலர் படம் குறித்து தனுஷ் போட்ட ட்வீட்! என்ன தெரியுமா?

சினிமா

ஜெயிலர் படம் குறித்து தனுஷ் போட்ட ட்வீட்! என்ன தெரியுமா?

ரஜினிக்கு அண்ணாத்த என்ற பெரிய தோல்வியும், நெல்சனுக்கு பீஸ்ட் என்ற பெரிய தோல்வியும் ஏற்பட்டது. இந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு, இருவரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர்.

அதன் விளைவாக இருவரும் ஜெயிலர் என்ற படத்தின் மூலம் ஒன்றாக இணைந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், வரும் 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் தொடர்பாக தான், ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில், இந்த படம் குறித்து, நடிகர் தனுஷ் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இது ஜெயிலர் வாரம் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை, தனுஷ் விவாகரத்து செய்துவிட்டபோதும், அதனை மனதில் வைத்துக் கொள்ளாமல், தனுஷ் இவ்வாறு பதிவிட்டிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top