Connect with us

Raj News Tamil

அருமையான வெற்றிப்படம்…..’அயோத்தி’ படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!

சினிமா

அருமையான வெற்றிப்படம்…..’அயோத்தி’ படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயோத்தி. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் சசிகுமார், குக் வித் கோமாளி புகழ், யஷ்பால் ஷர்மா, பிரியா அஸ்ரானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சமீபத்தில் இந்த படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியது. தற்போது வரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பாராட்டியுள்ளார்.

அவருடைய ட்விட்டரில் “அயோத்தி…நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top