Connect with us

Raj News Tamil

அயோத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

அயோத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று, பல வருடங்களாக போராடி வந்தார். அந்த கனவு, தற்போது அவர் நடித்துள்ள அயோத்தி படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், மனிதம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட கருத்துகளை, பிரச்சார நெடி இல்லாமல், எதார்த்தமாக பேசியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், 3 வாரங்களாகியும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா, படக்குழு சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்திக்கும், தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், தங்க சங்கிலியை பரிசளித்தார்.

மேலும், இந்தி மற்றும் தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில், அஜய் தேவ்கனும், தெலுங்கில், வெங்கடேஷ்-ம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு மொழிகளிலும், அயோத்தியா என்று தான் பெயர் வைக்க உள்ளனர்.

அயோத்தி திரைப்படம் மார்ச் 31ம் தேதி ஜி 5 ஒடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் ஏப்ரல் 7 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top