Connect with us
Raj News Tamil

Raj News Tamil

“ரஜினியே கூப்பிட்டுக் கொடுத்தாரு.. நான்தான் வேணானு சொல்லிட்டேன்” – செந்தில்

சினிமா

“ரஜினியே கூப்பிட்டுக் கொடுத்தாரு.. நான்தான் வேணானு சொல்லிட்டேன்” – செந்தில்

ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில், அவருடன் நடிகர் செந்திலும், இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் செந்தில், அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், ரஜினியுடன், மற்ற படங்களில் நடித்த அனுபவம் குறித்தும், பேசியுள்ளார். அப்போது, ரஜினியின் படத்தை தயாரிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது.

ரஜினியே தேடி வந்து எனக்கு கால்ஷீட் தந்தார். ஆனால், நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். உங்களுடன் சேர்ந்து நடிப்பதே எனக்கு போதும் என்று கூறிவிட்டேன் என செந்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் படத்தை தயாரித்திருந்தால், நான் பணக்காரனாக மாறியிருப்பேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். நல்ல வாய்ப்பை செந்தில் மிஸ் பண்ணிவிட்டார் என்று, இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

More in சினிமா

To Top