Connect with us

Raj News Tamil

விடுதலை படத்தில் நடிகர் சூரி வாங்கிய சம்பளம்…இவ்வளவு தானா?

சினிமா

விடுதலை படத்தில் நடிகர் சூரி வாங்கிய சம்பளம்…இவ்வளவு தானா?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்த சூரிக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

நாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது விடுதலை படத்தில் நடிகர் சூரி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரி 30 லட்ச ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பை வைத்து அவர் அடுத்தடுத்து கமிட்டாகும் படங்களில் தன் சம்பளத்தை உயர்த்துவார் என கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top