Connect with us

Raj News Tamil

4 ஆண்டு ஆனாலும் முடியாது.. அதிர்ச்சி கொடுத்த வெற்றிமாறன்!

சினிமா

4 ஆண்டு ஆனாலும் முடியாது.. அதிர்ச்சி கொடுத்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில், கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், 2-ஆம் பாகம் தாமதம் ஆவதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.

அதன்படி, “கிளைமேக்ஸ் காட்சிகளை எடுப்பதற்கு, 100 நாட்கள் எடுத்துக் கொண்டோம். ஆனால், முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை வைத்து பார்க்கும்போது, 4 வருடங்கள் ஆனாலும், இப்படத்தை எடுக்க முடியாது என்று தெரிந்தது.

அதன்பிறகு தான், படப்பிடிப்பு நடத்தும் விதத்தை மாற்றி அமைத்தோம். இதனால் தான் விடுதலை 2 ரிலீஸ் தாமதம் ஆகிறது” என்று அவர் கூறினார்.

More in சினிமா

To Top