Connect with us

Raj News Tamil

போலா சங்கர் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சினிமா

போலா சங்கர் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், அஜித்துக்கு நிறைய குடும்ப ஆடியன்ஸை பெற்றுத் தந்தது.

இந்த திரைப்படம், தற்போது தெலுங்கில் போலா சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ஆகஸ்டு 11-ஆம் தேதி அன்று வெளியானது.

கலவையான விமர்சனங்களையே பெற்ற இப்படம், படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று, நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், இப்படம் வெளியாக உள்ளது.

தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்திய ஆகிய மொழிகளிலும், இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top