Connect with us

Raj News Tamil

பிரபல மாஸ் நடிகருடன் கூட்டணி! மரகத நாணயம் இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்!

சினிமா

பிரபல மாஸ் நடிகருடன் கூட்டணி! மரகத நாணயம் இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்!

ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், காளி வெங்கட் என்று பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்த திரைப்படம் மரகத நாணயம். ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பிறகு, ஹிப் ஹாப் தமிழா ஆதியை ஹீரோவாக வைத்து, வீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் வெள்ளிக் கிழமை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் அடுத்ததாக, பிரபல மாஸ் நடிகரை வைத்து, படம் இயக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன், நடிகர் தனுஷை சந்தித்து, பல்வேறு கதைகளை கூறியுள்ளாராம். இந்த கதைகள் தனுஷ்-க்கு பிடித்துவிட்டதாகவும், விரைவில் நாம் இணையலாம் என்று இயக்குநரிடம் உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top