Connect with us

Raj News Tamil

2 பாட்டு ஹிட் கொடுத்தா இசைப்புயல் ஆகிடலாமா..? – ஜேம்ஸ் வசந்தன்

சினிமா

2 பாட்டு ஹிட் கொடுத்தா இசைப்புயல் ஆகிடலாமா..? – ஜேம்ஸ் வசந்தன்

கண்கள் இரண்டால் பாடலின் மூலம் நமது இதயத்தை கொள்ளை கொண்டவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஷயங்களுக்கு தனது கருத்தையும் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர்கள் குறித்தும், இப்போது வரும் பாடல்கள் குறித்தும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, இப்போதுள்ள பாடல்கள் எல்லாம் 6 மாதம் வரை தான் கேட்க முடிகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் உலகளவில் பல மொழி படங்களை இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான், அவருடன் அனிருத்தை ஒப்பிடவே கூடாது. இந்த தலைமுறை இசையமைப்பாளர்கள் எவரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் போட்டி போடும் அளவிற்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான், இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அனிருத்தை ஒப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top