Connect with us

Raj News Tamil

உலகளவில் சாதனை படைக்கும் ஜவான் திரைப்படம்..!

சினிமா

உலகளவில் சாதனை படைக்கும் ஜவான் திரைப்படம்..!

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், வெளியான முதல் நாளே 129 கோடிக்கும் மேல் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், உலகளவில் இப்படம் செய்த வசூல் சாதனை குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதனால் உலகளவில் அதிகம் வசூல் செய்த 2-வது இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது ஜவான்.

முதலிடத்தில் ஆமிர்கானின் ‘தங்கல்’ படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top