Connect with us

Raj News Tamil

தளபதிக்கு ஒரு மாஸ் டயலாக் பார்சல்.. லியோ நிச்சயம் LCU திரைப்படம் தான்! ஆதாரத்துடன் வெளியான நச் தகவல்!

சினிமா

தளபதிக்கு ஒரு மாஸ் டயலாக் பார்சல்.. லியோ நிச்சயம் LCU திரைப்படம் தான்! ஆதாரத்துடன் வெளியான நச் தகவல்!

கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களின் மூலம், LCU என்று அழைக்கப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வைத்துள்ளார். இந்த யுனிவர்ஸில், விஜயின் லியோ படமும் இணையுமா என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை, அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், கைதி, விக்ரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஹரிஷ் உத்தமன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜயிடம் இவர் பேசுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், “லியோ நீ ஆபத்துல இருக்க” என்று ஹரிஷ் உத்தமன் கூறுகிறார். அதற்கு பதில் அளிக்கும் தளபதி விஜய், “நான் ஆபத்தில் இல்லை.. என்னால் தான் ஆபத்து” என்று செம மாஸான டயலாக்கை பேசுகிறார். இவ்வாறான புகைப்படத்தை பகிர்ந்துள்ளதன் மூலம், இரண்டு தகவல்கள் கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

ஒன்று என்னவென்றால், இந்த படம் நிச்சயம் செம மாஸாக இருக்கும். இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால், கைதி, விக்ரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர், இந்த படத்திலும் நடித்துள்ளதால், இது நிச்சயம் LCU-ல் தான் வெளிவர உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top