Connect with us

Raj News Tamil

நயன்தாராவின் கழுத்தை அறுத்த அட்லி! தம்பி மீது செம கடுப்பில் இருக்கும் அக்கா!

சினிமா

நயன்தாராவின் கழுத்தை அறுத்த அட்லி! தம்பி மீது செம கடுப்பில் இருக்கும் அக்கா!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று தொடர் ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ள இவர், ஷாருக்கானை வைத்து, ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம், வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் எடிட் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் அமர்ந்து படத்தை பார்த்துள்ளனர்.

பார்த்தவர்கள் அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களையே கூறியுள்ளனர். ஆனால், நயன்தாரா மட்டும், அட்லி மீது செம கடுப்பில் உள்ளாராம். அதாவது, இந்த படத்தில் நயன்தாரா நடித்திருந்த பல்வேறு காட்சிகள், நீக்கப்பட்டுவிட்டதாம்.

பாலிவுட்டில் நல்ல அறிமுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், இந்த படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஆனால், அட்லி இவ்வாறு செய்திருப்பது, நயன்தாரா தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

More in சினிமா

To Top