Connect with us

Raj News Tamil

ரஜினிக்கு கோவில் கட்டி, குலதெய்வமாக வழிபடும் தீவிர ரசிகர்..!

சினிமா

ரஜினிக்கு கோவில் கட்டி, குலதெய்வமாக வழிபடும் தீவிர ரசிகர்..!

மதுரையில் உள்ள திருமங்கலத்தில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக், தனது அலுவலகத்தில் ஒரு
அறையை கோவிலாக மாற்றியுள்ளார். அதில் அபூர்வ ராகங்கள் தொடங்கி ஜெயிலர் வரை, ரஜினியின் அனைத்து புகைப்படங்களையும் சுவரில் ஒட்டியுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் உருவப்படத்திற்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் நடத்தியும் கற்பூரம் ஏற்றியும் தினமும் 2 வேளை பூஜை செய்து வருகிறார்.

ரஜினியை நேரில் சந்திக்க பலமுறை கடிதம் அனுப்பி உள்ளதாகவும், இதுவரை, வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோல் வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதால் தான் இன்றளவும் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top