Connect with us

Raj News Tamil

அமெரிக்காவிலும் கலக்கும் சூப்பர் கிங்ஸ்!

விளையாட்டு

அமெரிக்காவிலும் கலக்கும் சூப்பர் கிங்ஸ்!

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) எனும் ஃப்ரான்சைஸ் லீக் டி20 கிரிக்கெட்டின் முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் , எம்ஐ நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிக்கார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம், சியாட்டில் ஓர்காஸ் என ஆறு அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐபிஎல் போல அமெரிக்க நாட்டில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் இது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

டிஎஸ்கே அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்படுகிறார். சிஎஸ்கே அணியில் பௌலிங் பயிற்சியாளர் ப்ராவோ இதில் பிளேயிங் லெவனில் விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்எஃப்யூ அணி முதலில் பேட்டிங் செய்து 171 /8 ரன்கள் எடுத்தது. அதிகப்ட்சமாக வேட் 49(30)ரன்கள் அடித்தார். அடுத்து ஆடிய டிஎஸ்கே 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிலிந் குமார் 52(42) ரன்களும் டேனியல் சாம்ஸ் 42(18)ரன்களும் எடுத்து அசத்தினர்.

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்திய டேனியல் சாம்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலமாக 6 புள்ளிகளுடன் டிஎஸ்கே அணி ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ப்ளே-ஆஃப் சென்ற அணியாக சிஎஸ்கே அணியே உள்ளது. அதே தரமான அணியாக டிஎஸ்கே அணியும் உருவாகியுள்ளதால் சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More in விளையாட்டு

To Top