Connect with us

Raj News Tamil

நீங்க எதிர்பார்த்த அந்த பெரிய மேட்டர் தளபதி 67-ல் இல்லை!

சினிமா

நீங்க எதிர்பார்த்த அந்த பெரிய மேட்டர் தளபதி 67-ல் இல்லை!

தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக விஜயின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வரிசையாக அப்டேட் வந்துக் கொண்டே உள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முழுவதும், படத்தில் யார்? யார்? நடிக்கிறார்கள் என்ற விவரம் வந்துக் கொண்டே இருந்தது.

அதுமட்டுமின்றி, படத்தின் பூஜை தொடர்பான வீடியோவும் வெளியாகி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிப்ரவரி 2-ஆம் தேதியான இன்று, என்னவென்னால், அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இந்த படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 67 திரைப்படம், லோகேஷ் கனகராஜின், LCU -ன் படி ( லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் ) உருவாகவில்லையாம். விஜய் மற்றும் லோகேஷின் தனிப்படமாகவே உருவாக உள்ளதாம். இதன்காரணமாக, இந்த படத்தில், நடிகர் கமல் ஹாசன் இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கமலின் விக்ரம் கதாபாத்திரம், சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம், கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் மற்றும் தளபதி 67-ல் உள்ள விஜயின் கதாபாத்திரம் ஒரே படத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top