Connect with us

Raj News Tamil

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!

விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது போட்டியில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி களமிறங்கியது, அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திரும்பினர்.

தொடக்க வீரர் குசல் பெரேரா மட்டும் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அவரை தொடர்ந்து சற்று பொறுப்புடன் விளையாடிய மகிஷ் திங்க்ஷனா 91 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் இலங்கை அணி 46.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கியது நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே 45 ரன்களும், ரச்சின் ரவீந்திரன் 42 ரன்களும் சிறப்பாக குவித்தனர் அவரை தொடர்ந்து டேரில் மிட்செல் 31 பந்துகளில் 43 ரன்கள்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் 23.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்கள் குவித்தது.

மேலும் உலக கோப்பை தொடரில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஏறத்தாழ 4-ஆம் இடத்தை உறுதி செய்துவிட்ட நியூஸிலாந்து, அரையிறுதிக்கு 99.9 சதவீதம் நுழைந்துவிட்டதாகவே கருதலாம். ஏனெனில், அந்த அணிக்கு முதல் போட்டியாக இருக்கும் பாகிஸ்தான், கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினாலும் நியூஸிலாந்தின் தற்போதைய ரன் ரேட்டை எட்டுவது கடினமாகும். 2-ஆவது போட்டியாக இருந்த ஆப்கானிஸ்தான், வாய்ப்பை இழந்துவிட்டதாகவே கொள்ளலாம்.

More in விளையாட்டு

To Top