Connect with us

Raj News Tamil

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

சினிமா

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, ஓடிடி தளங்கள் என்பது, இந்தியாவிலும் பெரும் பிரபலம் அடைந்துவிட்டது.

இதனால், தியேட்டரில் வெளிவரும் படங்களுக்கு இணையாக, ஓடிடியில் வெளியாகும் படங்களும், முக்கிய இடத்தை, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி, மொழி கடந்து, அனைத்து வகையான சினிமாக்களையும், ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதன்காரணமாக, ஒவ்வொரு வாரமும், திரையரங்குகளுக்கு இணையாக, ஓடிடியிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில், இந்த வாரமும் ஓடிடியில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம், கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.

இந்த திரைப்படம், நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதேபோல், அமேசான் பிரைம் ஓடிடியில் தி வில்லேஜ் திரைப்படமும் நாளை தான் வெளியாக உள்ளது.

மேலும், சித்தார்த்த நடித்த சித்தா திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் 28-ஆம் தேதியும் வெளியாக உள்ளது.

மேலும், ஆஹா ஓடிடியில் டெமன் திரைப்படமும், சோனி லைவ் ஓடிடியில் சத்திய சோதனை திரைப்படமும், இந்த வாரம் தான் ஓடிடியில் வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top