Connect with us

Raj News Tamil

வசூலில் தூள் கிளப்பும் வாரிசு….எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

வசூலில் தூள் கிளப்பும் வாரிசு….எத்தனை கோடி தெரியுமா?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது.

இதே நாளில் அஜித் நடித்த துணிவு படமும் வெளியானதால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

துணிவு படமும் வாரிசு படமும் வெளியான நிலையில் முதல் நாளில் வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு முதலிடத்தைப் பிடித்தது. இதையடுத்து வாரிசு படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதற்கு குடும்ப பார்வையாளர்களின் ஆதரவு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி 7 நாட்கலில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top