Connect with us

Raj News Tamil

அடுத்த கட்டத்திற்கு சென்ற அஜித்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

அடுத்த கட்டத்திற்கு சென்ற அஜித்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் நடிக்க உள்ளார். மகிழ் திருமேனி இயக்க உள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் பின்னணி வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தன்னுடைய உலக பைக் சுற்றுப் பயணத்தை, அஜித் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். மேலும், நோபாளம், பூட்டான் ஆகிய நாடுகளையும் அவர் கடந்து சென்றுள்ளார். இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது உலக பைக் பயணத்தின் இரண்டாவது கட்டத்தை, வரும் நவம்பர் மாதம் அஜித் தொடங்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, விடாமுயற்சி படத்தின் பணிகள் அனைத்தும், நவம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top