Connect with us

Raj News Tamil

ஃபர்ஹானா படத்தின் வசூல் இவ்வளவு கம்மியா? படம் நல்லா தானே இருந்துச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமா

ஃபர்ஹானா படத்தின் வசூல் இவ்வளவு கம்மியா? படம் நல்லா தானே இருந்துச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவர் அடுத்ததாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை மையமாக வைத்து, ஃபர்ஹானா என்ற படத்தை எடுத்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரிலீசுக்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சில திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால், படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்தபோதிலும், வசூலில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் தமிழக வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் தமிழகம் முழுவதும் ரூபாய் 50 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள், “படம் நல்லா தானே இருந்துச்சு.. ஆனால் ஏன் இவ்வளவு குறைவான வசூல் கிடைத்துள்ளது” என்று ஆச்சரியமான கமெண்ட்டுக்களை கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top