Connect with us

Raj News Tamil

தளபதி 68 படத்தின் டைட்டில் இதுதான்? வெளியான அதிரடி தகவல்!

சினிமா

தளபதி 68 படத்தின் டைட்டில் இதுதான்? வெளியான அதிரடி தகவல்!

வாரிசு படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை, வரும் அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் மும்மரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே, தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்கு என்ன டைட்டில் வைக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு, சி.எஸ்.கே என்று பெயர் வைக்க உள்ளார்களாம். ஆனால், சி.எஸ்.கே என்பதற்கான முழு விளக்கம் என்ன என்பது, தற்போது வரை சஸ்பென்ஸாக உள்ளது.

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். தளபதி 68 படம் தொடர்பான தகவல், லியோ படம் ரிலீசான பிறகு, வரிசையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்கு மங்காத்தா போல், விஜய்-க்கும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை, வெங்கட் பிரபு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top