Connect with us

Raj News Tamil

திடீரென மொட்டை போட்ட நடிகர் தனுஷ்! சாமி மீது இவ்வளவு பக்தியா? கூடவே இன்னொரு அப்டேட்!

சினிமா

திடீரென மொட்டை போட்ட நடிகர் தனுஷ்! சாமி மீது இவ்வளவு பக்தியா? கூடவே இன்னொரு அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடிய இவர், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு என்று மற்ற மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில், கேங்ஸ்டராக நடித்து வந்தார். இந்த படத்திற்காக, அதிக அளவில் முடியை வளர்த்துக் கொண்டு, செம மாஸான கெட்டப்பில் வலம் வந்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அப்படத்தின் ஷீட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, தனது தாய், தந்தை, இரண்டு மகன்களுடன் திருப்பதிக்கு சென்று, சாமி தரிசனம் செய்துள்ளார். அதோடு, ஏழுமலையானுக்கு தனது முடியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

இவர் மட்டுமின்றி, இவரது மகன்கள் இரண்டு பேரும் முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கேப்டன் மில்லர் படத்திற்காக முடியை வளர்த்து வந்த தனுஷ், தற்போது மொட்டை அடித்திருப்பதால், அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதாகவே தெரிகிறது.

எனவே, இப்படத்தின் டிரைலர், பாடல் போன்ற அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் மொட்டை அடித்து, திருப்பதியில் வலம் வரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top